'பா.ஜ., மீது மக்கள் நம்பிக்கை᳚' * பன்னீர்செல்வம் கமென்ட்

ஆண்டிபட்டி,:கேரள மாநிலம் மூணாறில் சுற்றுலா பஸ் விபத்துக்குள்ளானதில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 7 கல்லூரி மாணவர்கள் காயமடைந்தனர்.

அவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். காயமடைந்த மாணவர்களை முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பா.ஜ., மீது மக்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இதனால் 27 ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் பா.ஜ., ஆட்சியை பிடித்துள்ளது என்றார்.

Advertisement