கிருஷ்ணன் கோயில் பழமை கல்வெட்டு கண்டெடுப்பு

அரியலுார்:நிலதானம் வழங்கிய தகவல் பொறித்த 285 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அரியலுார் கிருஷ்ணன் கோயிலில் சீரமைப்பு பணி நடந்து வருகிறது. நேற்று நடந்த பணியின்போது, அங்குள்ள உள் மண்டபத்தில், தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட 4 அடி உயரமுள்ள கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து அரியலுார் அரசு கலைக் கல்லுாரி வரலாற்று துறை தலைவர் ரவி கூறியதாவது:

இந்த கல்வெட்டில், பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான வாமன அவதார சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. 1739ம் ஆண்டு, அரியலுார் ஜமீன்தார் விஜய ஒப்பில்லாத மழவராயரால் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பெருமாள் கோயிலுக்கும், கிருஷ்ணன் கோயிலுக்கும் நிலதானம் வழங்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement