'சைபர் குற்றவாளிகளாக மாற்ற கர்நாடகாவில் சிறப்பு பயிற்சி'
சென்னை:பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகளாக மாற, கர்நாடகாவில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுவதாக, கைதான நபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இணையவழியில் பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகளான, கேரள மாநிலத்தை சேர்ந்த அன்வர்ஷா, 27, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஜுபர் உல்லாகான், 23; சல்மான்கான், 30; கிரீஷ், 25 ஆகியோரை, சைபர் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் இருந்து, மொபைல் போன் சிம் கார்டுகள், மடிக்கணினி உள்ளிட்ட, 'டிஜிட்டல்' ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அவற்றை ஆய்வு செய்த போது, இவர்களின் கூட்டாளிகள், பெங்களூரு மற்றும் மைசூரு நகரங்களில் பதுங்கி இருப்பதும், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து, சைபர் குற்றவாளிகளாக மாற்றி வருவதும் தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார், கர்நாடகா மாநிலத்தில் முகாமிட்டு சைபர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
பெங்களூருவை சேர்ந்த சல்மான்கான் அளித்துள்ள வாக்குமூலம்: எங்கள் ஊரில் தங்கி வேலை பார்த்து வந்த வடமாநிலத்தோர், ஆன்லைன் வாயிலாக பண மோசடி செய்யும் முறையை கற்றுத் தந்தனர். கேரள மாநிலத்தை சேர்ந்த சிலரும் பயிற்சி அளித்தனர். அதன்பின், நானும் என் கூட்டாளிகளும், இளைஞர்களை மூளைச்சலவை செய்து, சைபர் குற்றவாளிகளாக மாற்றி வந்தோம்.
இதற்காக, எங்கள் மாநிலத்தில் சிறப்பு பயிற்சி அளிக்கும் மையங்களையும் நடத்தி வந்தோம். அவர்கள் மோசடி செய்யும் தொகைக்கு ஏற்ப, கமிஷன் தர வேண்டும். நாங்களும் தமிழகம், கேரளா, கர்நாடகா மாநில மக்களிடம், அவர்களின் தாய் மொழியில், டிஜிட்டல் அரெஸ்ட், பங்கு சந்தையில் முதலீடு என, 20 வகையான மோசடிகளில் ஈடுபட்டு வந்தோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
பொது கணக்கு குழு ஆய்வு கண்துடைப்பா? ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துாரில் குற்றச்சாட்டு
-
மாயமான மணப்பெண்; இறந்ததாக தகவல் பரவியதால் போலீசார் அதிர்ச்சி
-
நோக்கியா துணை மின் நிலையத்தில் தீ
-
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு; கல்வி அதிகாரி சிறைக்கு தடை; உயர்நீதிமன்றம் உத்தரவு
-
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல அனுமதிக்க வழக்கு; உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
-
விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடை வெள்ளை வர்ணம் பூச வலியுறுத்தல்