48 சவரன் நகை திருடிய கொள்ளையர்கள் கைது

அரியலுார்:வீட்டின் பூட்டை உடைத்து 48 சவரன் திருடிய ஐந்து பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அரியலுார் மாவட்டம், கச்சிப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தா, 68. பிப். 14ம் தேதி இவர், 100 நாள் வேலைக்கு சென்று, மாலை வீட்டுக்கு வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் 48 சவரன் நகைகள், ஒரு கிலோ வெள்ளி, 1 லட்சம் ரூபாய் திருடு போயிருந்தது.

உடையார்பாளையம் போலீசார் விசாரித்ததில், சிவகங்கை சண்முகநாதன், 27, மணிக்காளை, 29, சிவகாசி அழகுபாண்டி, 24, ராமநாதபுரம் தனசிங், 22, துாத்துக்குடி வெங்கடேசன், 24, ஆகியோர் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

ஐந்து பேரையும் கைது செய்த போலீசார், 37 சவரன் நகை, 430 கிராம் வெள்ளி, 40,000 ரூபாய், திருட்டுக்கு பயன்படுத்திய கார், மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Advertisement