மின்சாரம் பாய்ந்து 2 தொழிலாளர் பலி

கரூர்:கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் கிரசர்மேட்டில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், முன்னுார் பஞ்., சார்பில் அமைக்கப்பட்டுள்ள போர்வெல்லில் பழுது ஏற்பட்டது. இதை சரி செய்ய, முன்னுார் பாலசுப்பிரமணியன், 44, நிமிந்தப்பட்டி சதீஷ், 30, ஆகியோர் வந்தனர்.

போர்வெல்லில் பழுதை நீக்கும் பணியில் நேற்று மதியம் இருவரும் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மேலே செல்லும் மின்கம்பி மீது, போர்வெல் வாகனம் உரசியதில் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement