90 நொடிகளில் நடந்த வங்கி கொள்ளை சிறுவர்கள் கைது

வைஷாலி, பீஹாரின் ஹாஜிபூரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் இரு மர்ம நபர்கள் துப்பாக்கியுடன் புகுந்தனர்.

அவர்களில் ஒருவர் துப்பாக்கியால் வாடிக்கையாளர்களை மிரட்ட மற்றொருவர் கேஷியர் அறைக்குள் புகுந்து 1.5 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தார். பின்னர் அவர்கள் தப்பினர்.

அங்குள்ள, 'சிசிடிவி' ஆய்வு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் 17 மற்றும் 18 வயது சிறுவர்கள் என்பதும், கொள்ளை சம்பவம் வெறும் 90 நொடிகளில் நடந்ததும் தெரியவந்தது.

Advertisement