ஸ்குவாஷ்: சவுரவ் 'சாம்பியன்'

சிட்னி: சிட்னி சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் சவுரவ் கோசல் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், சர்வதேச சேலஞ்சர் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் சவுரவ் கோசல், எகிப்தின் அப்தெல்ரஹ்மான் நாசர் மோதினர். அபாரமாக ஆடிய சவுரவ் கோசல் 3-0 (11-2, 11-6, 11-2) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஓய்வை அறிவித்த சவுரவ் கோசல், சமீபத்தில் அதனை திரும்ப பெற்றுக் கொண்டு போட்டியில் பங்கேற்று வருகிறார். வரும் 2028ல் நடக்கவுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் போட்டி அறிமுகமாகிறது. இதில் பங்கேற்பதற்காக மீண்டும் போட்டியில் விளையாடுகிறார். இருப்பினும் அடுத்த ஆண்டு நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெறுவதே இவரது முதல் இலக்கு.

Advertisement