ஜெர்மனியில் இன்று அதிபர் தேர்தல்: எதிர்க்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு!

பெர்லின்: ஐரோப்பாவின் பெரிய பொருளாதாரத்தை கொண்ட ஜெர்மனியில் இன்று பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியுள்ளது. எதிர்க்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெர்மனியில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக்கட்சி ஆட்சியில் இருக்கிறது. கடந்தாண்டு நவம்பரில், கூட்டணியை கட்சியை சேர்ந்தவரான நிதியமைச்சரை அதிபர் திடீர் பதவி நீக்கம் செய்தார். இதையடுத்து நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசு தோல்வியுற்றதை தொடர்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில், அதிபர் ஸ்கால்ஸின் சமூக ஜனநாயகக் கட்சிக்கும், முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்துவ ஜனநாயக யூனியனுக்கும் கடும் போட்டி இருக்கும் என்று துவக்கத்தில் கருதப்பட்டது.ஆனால், வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி., கட்சியும் கடும் போட்டியை அளித்து வருகிறது.
ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி., சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர், அதிபர் தேர்தலில் மோதுகின்றனர். பசுமை கட்சியின் ராபர் ஹபெக்கும் தேர்தல் களத்தில் இருக்கிறார்.இன்று தேர்தல் ஓட்டுப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவரான பிரெட்ரிக் மெர்ஸ் அதிபர் ஆவதற்கே வாய்ப்புள்ளதாகவும், அவரது கட்சியே முன்னணியில் இருப்பதாகவும், அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குட்டையை குழப்பிய மஸ்க்
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க், ஏ.எப்.டி., கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார்.
அவரது பிரசாரம், ஜெர்மனியில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதிபர் ஸ்கால்ஸ், 'எலான் மஸ்க் செய்வது மிகவும் அருவருப்பாக உள்ளது' என்று விமர்சனம் செய்திருந்தார்.
வலதுசாரிக்கு செல்வாக்கு அதிகரிப்பு
இந்த தேர்தலில், வலதுசாரி ஏ.எப்.டி., கட்சி வெற்றி பெறாவிட்டாலும், கூடுதல் ஓட்டுகளை பெற்று, நாட்டின் இரண்டாவது பெரிய அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.



மேலும்
-
ஒரே நேரத்தில் 267 டிரோன்கள் மூலம் தாக்குதல்; உக்ரைனை ஸ்தம்பிக்க வைத்த ரஷ்யா
-
வெடிகுண்டு மிரட்டல்: ரோமுக்கு திருப்பி விடப்பட்ட நியூயார்க் -டில்லி விமானம்
-
கோலி சதம்... இந்தியா அபாரம்: அரையிறுதிக்கு முன்னேறியது
-
பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்களுடன் டில்லி வந்த விமானம்
-
மோடி, டிரம்ப், மெலானி சேர்ந்தால் ஜனநாயகத்துக்கே பேராபத்தா? இடதுசாரிகளை வெளுத்தார் இத்தாலி பிரதமர்!
-
ரூ.58,104 கோடி வரி செலுத்திய அதானி குழுமம்!