புதுடில்லி மாரத்தான்: மான் சிங் அபாரம்

புதுடில்லி: புதுடில்லி மாரத்தான் ஓட்டத்தில் உத்தரகாண்ட்டின் மான் சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
புதுடில்லியில், மாரத்தான் ஓட்டம் நடந்தது. இப்போட்டியை, இந்திய பாட்மின்டன் தலைமை பயிற்சியாளர் கோபிசந்த், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரகானே கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
ஆண்கள் பிரிவில், 42.195 கி.மீ., துாரம் கொண்ட பந்தய துாரத்தை 2 மணி நேரம், 15 நிமிடம், 24 வினாடியில் கடந்த உத்தரகாண்ட்டின் மான் சிங் முதலிடம் பிடித்தார். இவர், கடந்த ஆண்டு ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். அடுத்த இரு இடங்களை பர்தீப் சவுத்தரி (2 மணி நேரம், 15 நிமிடம், 29 வினாடி), அக்சய் சைனி (2 மணி நேரம், 15 நிமிடம், 34 வினாடி) கைப்பற்றினர்.
பெண்கள் பிரிவில் உத்தரகாண்ட்டின் பாகிரதி பிஷ்ட் (2 மணி நேரம், 48 நிமிடம், 59 வினாடி) முதலிடத்தை தட்டிச் சென்றார். அடுத்த இரு இடங்களை தாக்கூர் பரத்ஜீ (2:49:16), அஷ்வினி யாதவ் (2:50:48) பிடித்தனர்.
பெண்களுக்கான 10 கி.மீ., ஓட்டத்தில் அஞ்சலி தேவி (36 நிமிடம், 46 வினாடி), சுதா சிங் (40 நிமிடம், 02 வினாடி), வித்யாஸ்ரீ (42 நிமிடம், 09 வினாடி) முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.
மேலும்
-
ஒரே நேரத்தில் 267 டிரோன்கள் மூலம் தாக்குதல்; உக்ரைனை ஸ்தம்பிக்க வைத்த ரஷ்யா
-
வெடிகுண்டு மிரட்டல்: ரோமுக்கு திருப்பி விடப்பட்ட நியூயார்க் -டில்லி விமானம்
-
கோலி சதம்... இந்தியா அபாரம்: அரையிறுதிக்கு முன்னேறியது
-
பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்களுடன் டில்லி வந்த விமானம்
-
மோடி, டிரம்ப், மெலானி சேர்ந்தால் ஜனநாயகத்துக்கே பேராபத்தா? இடதுசாரிகளை வெளுத்தார் இத்தாலி பிரதமர்!
-
ரூ.58,104 கோடி வரி செலுத்திய அதானி குழுமம்!