மொனாகோ செஸ்: ஹம்பி 'டிரா'

புதுடில்லி: மொனாகோ ஓபன் செஸ் 5வது சுற்றை இந்தியாவின் ஹம்பி 'டிரா' செய்தார்.
மொனாக்கோவில், பெண்களுக்கான கிராண்ட் பிரிக்ஸ் செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் கொனேரு ஹம்பி, ஹரிகா உட்பட மொத்தம் 10 வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதன் 5வது சுற்றில் ஹம்பி, சீனாவின் டான் ஜோங்கி மோதினர். ஹம்பி, கருப்பு நிற காய்களுடன் விளையாடினார். விறுவிறுப்பான இப்போட்டி 69வது நகர்த்தலின் போது 'டிரா' ஆனது.
இந்தியாவின் ஹரிகா, ரஷ்யாவின் அலெக்சாண்ட்ரா கோஸ்டெனியுக் மோதிய மற்றொரு 5வது சுற்றுப் போட்டியும் 'டிரா' ஆனது.
ஐந்து சுற்றுகளின் முடிவில் ரஷ்யாவின் கேத்ரினா லாக்னோ 3.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். ஹம்பி, பட்குயாக் (மங்கோலியா), சரசாதத் (ஸ்பெயின்) தலா 3.0 புள்ளிகளுடன் 2வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். ஹரிகா, 1.5 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒரே நேரத்தில் 267 டிரோன்கள் மூலம் தாக்குதல்; உக்ரைனை ஸ்தம்பிக்க வைத்த ரஷ்யா
-
வெடிகுண்டு மிரட்டல்: ரோமுக்கு திருப்பி விடப்பட்ட நியூயார்க் -டில்லி விமானம்
-
கோலி சதம்... இந்தியா அபாரம்: அரையிறுதிக்கு முன்னேறியது
-
பனாமாவுக்கு நாடு கடத்தப்பட்ட 12 இந்தியர்களுடன் டில்லி வந்த விமானம்
-
மோடி, டிரம்ப், மெலானி சேர்ந்தால் ஜனநாயகத்துக்கே பேராபத்தா? இடதுசாரிகளை வெளுத்தார் இத்தாலி பிரதமர்!
-
ரூ.58,104 கோடி வரி செலுத்திய அதானி குழுமம்!
Advertisement
Advertisement