செஸ்: இனியன் 2வது இடம்

டன்கிர்க்: பிரான்சில் நடந்த சர்வதேச செஸ் தொடரில் இந்தியாவின் இனியன் 2வது இடம் பிடித்தார்.

பிரான்சில், 41வது 'கேப்பெல் லா கிராண்டே' சர்வதேச ஓபன் செஸ் தொடர் நடந்தது. மொத்தம் 9 சுற்றுகள் நடந்தன. இதன் முடிவில் 6 வெற்றி, 3 'டிரா' என, தலா 7.5 புள்ளிகளுடன் இந்தியாவின் இனியன், பிரான்சின் மஹேல் போயர் சமநிலை வகித்தனர். அடுத்து நடந்த 'டை பிரேக்கரில்' ஏமாற்றிய தமிழகத்தின் இனியன் 2வது இடம் பிடித்தார். பிரான்சின் மஹேல் போயர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
மற்றொரு இந்திய வீரர் ராஜா ரித்விக், 3வது இடத்தை கைப்பற்றினார்.

Advertisement