துவக்க வீரராக ரோகித் சாதனை

துபாய்: இந்திய கேப்டன் ரோகித் சர்மா, துவக்க வீரராக 9000 ரன்னை கடந்து சாதனை படைத்தார்.
பாகிஸ்தானுக்கு எதிராக துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா, 20 ரன் எடுத்தார். ஒருநாள் போட்டி அரங்கில் அதிவேகமாக 9,000 ரன்னை எட்டிய துவக்க வீரரானார் ரோகித். இவர், 181 இன்னிங்சில், இந்த இலக்கை அடைந்தார். இதற்கு முன் இந்திய ஜாம்பவான் சச்சின், 197 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினார்.
* தவிர 9,000 ரன்னை எட்டிய 6வது துவக்க வீரரானார் ரோகித். இதுவரை 183 போட்டியில் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் 9,019 ரன் எடுத்துள்ளார். முதல் ஐந்து இடங்களில் இந்தியாவின் சச்சின் (15,310 ரன், 344 போட்டி), இலங்கையின் ஜெயசூர்யா (12,740 ரன், 383 போட்டி), வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (10,179 ரன், 280 போட்டி), ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் (9200 ரன், 260 போட்டி), இந்தியாவின் கங்குலி (9146 ரன், 242 போட்டி) உள்ளனர்.
5வது முறை
பாகிஸ்தானின் ஷாகீன் அப்ரிதி, ஒருநாள் போட்டியில் 5வது முறையாக ரோகித்தை அவுட்டாக்கினார்.
மேலும்
-
வடாரண்யேஸ்வரர் கோவிலில் மஹா சிவராத்திரி ஏற்பாடு
-
லட்சுமிபுரத்தில் பாதாள சாக்கடை அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் அவதி நீதிமன்றத்தை நாட பாதிக்கப்பட்டோர் முடிவு
-
திருத்தணி ரயில் நிலையத்தில் ரேஷன் அரிசி பறிமுதல்
-
சீமை கருவேல மரங்களால் ஓடையாக மாறிய கூவம் ஆறு
-
பாழடைந்த போலீஸ் குடியிருப்புகளால் பொன்னேரி குடியிருப்புவாசிகள் அச்சம்
-
திருத்தணி கோவிலில் வார விடுமுறை நாட்களில் குவியும் பக்தர்கள்