போலீஸ் செய்திகள்..

திருடிய ------------------------------இருவர் கைது



மதுரை: ரேஸ்கோர்ஸ் ரோட்டில் கலெக்டர் பங்களா, எஸ்.பி., தென்மண்டல ஐ.ஜி., உள்ளிட்ட உயர் அதிகாரிகளின் முகாம் அலுவலகங்கள் உள்ளன. இதனருகில் உள்ள டி.ஆர்.ஓ., காலனி விநாயகர் கோயிலில் ஆதிபராசக்தி வழிபாடு மன்றம் செயல்படுகிறது. இக்கோயில் முன்பாக கண்காணிப்பு கேமராக்கள், கோயில் நுழைவு வாயில் பூட்டுகள் உடைக்கப்பட்டு உண்டியலில் இருந்த பணம் திருடப்பட்டது தெரிந்தது. தல்லாகுளம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மயில் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. திருடிய பீபிகுளம் அருண் மேத்தா, இப்ராஹிம் ஆகியோரை கைது செய்து ரூ.6 ஆயிரத்து 200 ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சாவுடன் இருவர் கைது



மதுரை: வைகை தென்கரை பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸ் ரகசியமாக கண்காணித்தனர். அப்போது ஆண்டார் கொட்டாரத்தை சேர்ந்த அப்துல் கனி 32, ராஜா 47 பாக்கெட்டுகளில் கஞ்சா விற்பனை செய்தனர். அவர்களிடம் இருந்து ஆயிரத்து நுாறு கிராம் கஞ்சா, ரூ.9 ஆயிரத்து 400 ரொக்கம், இரண்டு அலைபேசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொழிலாளி தற்கொலை



மதுரை: சுப்பிரமணியபுரம் 2வது தெருவை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி சரவணக்குமார் 28. அடிக்கடி குடித்துவிட்டு தற்கொலை செய்வதாக மனைவியை மிரட்டினார். நேற்றும் வழக்கம் போல் மிரட்டியதால் அவரது மனைவி பொருட்படுத்தவில்லை. இதையடுத்து அறைக்குள் சென்று துாக்கிட்டு தற்கொலை செய்தார். ஜெய்ஹிந்த்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement