வரதர் கோவிலில் குடிநீர் மையம் பழுது தாகம் தீர்க்க முடியாத பக்தர்கள்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் சார்பில், எட்டு குழாய்களுடன் கூடிய சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் கடந்த 2018 ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் தாகம் தீர்க்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை பருகி வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம், இம்மையத்தில் குடிநீரை சுத்திகரிப்பு செய்யும் இயந்திரம் பழுடைந்தது. பழுதடைந்த இயந்திரத்தை சீரமைக்க எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

கோடை காலம் துவங்கி, குடிநீரின் தேவை அதிகரித்துள்ளதால், கடந்த ஒரு மாதமாக பழுதடைந்த நிலையில் உள்ள குடிநீர் சுத்திரிகரிப்பு மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து, வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, 'சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை, எஸ்.பி.ஐ., வங்கி நிர்வாகம்தான் பராமரித்து வருகிறது. இயந்திரம் பழுதடைந்தது குறித்து வங்கி நிர்வாக்திடம் தெரிவித்து உள்ளோம்' என்றனர்.

Advertisement