மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலப்பதால் சீர்கேடு

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, தாண்டவராயசெட்டி தெருவில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், சில ஆண்டுக்கு முன் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், கால்வாயை தோண்டி அடைப்பு சீர்செய்யப்பட்டது.
தற்போது, தோண்டப்பட்ட கால்வாயை மூடாமல் திறந்த நிலையிலே உள்ளது. கால்வாய் திறந்த நிலையிலே இருப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கால்வாயில் கலப்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி வருகிறது.
மேலும், நோய் பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மழைநீர் வடிகால்வாயில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, தோண்டப்பட்ட கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement