போதை தடுப்பு மாரத்தானில் 5,000 பங்கேற்பு

சென்னை:சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளி சார்பில், மனிதத் திறன் மேம்பாடு மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் சீரழிவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடந்தது.

போட்டிகள், 1.5, 5, 10, 21 கி.மீ., என, நான்கு பிரிவுகளில் நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு, ரொக்க பரிசு மற்றும் கேடயத்தை, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர், வருமான வரி ஆணையர் நந்தகுமார் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.

மாரத்தானில், 5,000 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Advertisement