பெண்ணிடம் செயின் பறிப்பு கடலுாரில் துணிகரம்

கடலுார், : கடலுாரில் நடந்து சென்ற பெண்ணிடம் பட்டப்பகலில் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலுார் கூத்தப்பாக்கத்தை சேர்ந்தவர் மோகன் மனைவி விஜயா,55; இவர் நேற்று மதியம் 2:30 மணியளவில் கூத்தப்பாக்கம் வள்ளியம்மை நகரில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர், விஜயாவின் கழுத்திலிருந்த ஒன்றரை சவரன் செயினை பறித்தார். திடுக்கிட்ட விஜயா, கூச்சலிட்டபடி அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். ஆனால், அதற்குள் அவர் தப்பிச் சென்றார்.

புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.

பட்டப் பகலில், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பெண்ணிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் கூத்தப்பாக்கம் பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement