இந்திய எல்லைக்குள் நுழைந்த ஆறு வங்கதேசத்தினர் கைது
ஷில்லாங்: மேகாலயாவில் உள்ள நம் நாட்டின் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஆறு பேரை, எல்லை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர்.
வடகிழக்கு மாநிலமான மேகாலயா அருகே, நம் அண்டை நாடான வங்கதேச எல்லை அமைந்துள்ளது. இதன் வழியாக, அந்நாட்டைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக உள்ளே நுழைவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதை தடுக்கும் வகையில், வங்கதேச எல்லையையொட்டி உள்ள பகுதிகளில் எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேகாலயாவின் எல்லை பகுதி வழியாக வங்கதேசத்தைச் சேர்ந்த நபர்கள் சட்டவிரோதமாக உள்ளே நுழைவதாக, எல்லை பாதுகாப்பு படையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து, மேற்கு ஜைந்தியா ஹில்ஸ் மாவட்ட எல்லையில் நான்கு பேரும், தெற்கு கேரோ ஹில்ஸ் மாவட்ட எல்லையில் இரண்டு பேர் என, மொத்தம் ஆறு வங்கதேசத்தினர் பிடிபட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், மஹாராஷ்டிராவின் மும்பையில் ஏற்கனவே கட்டுமான பணிகளில் ஈடுபட்டதும், தற்போது மீண்டும் வேறு பணிக்காக இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும்
-
தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு
-
தர்மபுரி தி.மு.க., - மா.செ., மாற்றம் தடங்கத்துக்கு தடங்கல் ஏற்பட்டது எப்படி?
-
சிறுமியை கர்ப்பமாக்கிய மத போதகருக்கு 'போக்சோ' மனைவி, மகனும் சிக்கினர்
-
பல்கலை மாணவி பாலியல் வழக்கில் கைதான ஞானசேகரன் அடகுவைத்த 100 சவரன் மீட்பு
-
சிதம்பரத்தில் பிப்.26ல் நாட்டியாஞ்சலி துவக்கம்
-
பட்டப்பகலில் கிராமத்தில் புகுந்து கன்று குட்டியை கொன்ற யானை