முதல்வர் மருந்தகங்களில் 762 மருந்துகள் விற்க முடிவு

சென்னை: ''மக்களுக்கான திட்டங்களை, ஜெயலலிதா பிறந்த நாளில் கூட துவக்கி வைக்கலாம்; அதில் தவறில்லை. தமிழகம் முழுதும் இன்று, 1,000 முதல்வர் மருந்தகங்களை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்,'' என, தி.மு.க., மருத்துவ அணி செயலர் எழிலன் கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க, 1,000 முதல்வர் மருந்தகங்கள் இன்று திறக்கப்பட உள்ளன. இவற்றில், 25 முதல், 50 சதவீதம் வரை குறைந்த விலையில் மருந்துகள் விற்கப்படும்.
கூட்டுறவு துறையும், தமிழக மருந்துகள் சேவைகள் கழகமும் இணைந்து, இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன. தமிழக அரசின் சார்பில், 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அம்மா மருந்தகங்களை மூடும் வாய்ப்பு இல்லை. கூட்டுறவு மருந்தகம், அம்மா மருந்தகம் போன்றவற்றுடன் முதல்வர் மருந்தகம் என, ஒரு ஆரோக்கியமான போட்டி இருக்கும்.
அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் மருந்துகள் நிறுத்தப்படாது. குறிப்பாக, 762 வகையான மருந்துகள், முதல்வர் மருந்தகங்களில் விற்பனை செய்யப்பட உள்ளன. மக்களுக்கான திட்டங்களை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளில் கூட துவக்கி வைக்கலாம்; அதில் தவறில்லை.
வ்வாறு அவர் கூறினார்.








மேலும்
-
தமிழகத்தின் தொன்மையை பறைசாற்றும் செங்கை புத்தக திருவிழா
-
பீஹாரில் லாரி - வேன் மோதியதில் 7 பேர் பலி; ம.பியில்., 6 பேர் உயிரிழந்த பரிதாபம்
-
நான் பணக்காரன் வீட்டுப் பிள்ளை அல்ல; தாயின் வறுமை நினைவுகளை பகிர்ந்து துரைமுருகன் உருக்கம்
-
ஜெர்மனியில் ஆட்சியைப் பிடிக்கிறது எதிர்க்கட்சி; தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டார் அதிபர் ஒலாப்
-
ஆஸ்திரேலிய முதியவரின் இறுதி ஆசை; இந்தியாவில் சொன்ன வாக்கை காப்பாற்றிய மனைவி நெகிழ்ச்சி!
-
யு.எஸ்.எய்டு அமைப்பின் 2 ஆயிரம் ஊழியர்கள் பணிநீக்கம்; அதிபர் டிரம்ப் உத்தரவு