அசாமில் தேயிலை தோட்ட தொழில் 200-ம் ஆண்டு விழா: மோடிக்கு ஜூமோயர் நடனத்துடன் வரவேற்பு

கவுஹாத்தி; அசாமில் தேயிலை தோட்ட தொழில் 200ம் ஆண்டு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடிக்கு 9000 ஜூமோயர் நடன பெண்கள் நடனமாடி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பிரதமர் மோடி இன்று பீஹார் சென்றார். அங்கு பாகல்பூரில் விவசாயிகள் கவுரவ திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ரூ. 6000 உதவித்தொகையை வழங்கி பேசினார். பின்னர் அங்கிருந்து அசாம் சென்றடைந்தார்.
அசாமில் தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு அம்மாநில அரசு சார்பில் மெகா விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்க சென்ற பிரதமர் மோடிக்கு ஒரே நேரத்தில் 9 ஆயிரம் ஜூமோயர் நடன பெண்கள் பங்கேற்ற நடனம் நிகழ்ச்சியில் நடந்தது.
முன்னதாக கவுஹாத்தியில் நடந்த ரோட் ஷோவில் பிரதமர் மோடிக்கு பா.ஜ.,வினர் தொண்டர்கள், பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
24 பிப்,2025 - 22:42 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கட்டுமான அனுமதி விண்ணப்பத்தில் கழிவு அகற்றுவோர் விபரம் கட்டாயம்
-
12 ஆண்டுகளாக நடக்கும் பாதாள சாக்கடை திட்ட பணி ஜவ்வு! கழிவுநீர் பிரச்னையால் ஸ்ரீபெரும்புதுார் மக்கள் தவிப்பு
-
ஜெயலலிதா பிறந்த நாள் 1,000 பேருக்கு அன்னதானம்
-
மாணவர்களுக்கான கிரிக்கெட் காஞ்சி ‛'பிரிம்மிங்' பள்ளி வெற்றி
-
சித்தியை வெட்டியவருக்கு வலை
-
ரேஷன் கடை துாண் சேதம் சிட்டியம்பாக்கத்தில் அச்சம்
Advertisement
Advertisement