பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமி: சுட்டுப்பிடித்த போலீசார்

28

திருநெல்வேலி:கோவில்பட்டியில் இளம் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போதை ஆசாமியை, போலீசார் காலில் சுட்டுப் பிடித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வீட்டில் தனியாக இருந்த இளம் பெண்ணிடம் மது போதையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்தவன் மாரிச்செல்வம். அவனை தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே போலீசார் கைது செய்ய முயன்றனர்

அப்போது எஸ்.ஐ., ராஜபிரபு மற்றும் காவலர் பொன்ராமை அரிவாளால் தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றான். வேறு வழியில்லாத போலீசார் மாரி செல்வத்தை காலில் சுட்டுப் பிடித்தனர். மாரி செல்வம் மற்றும் காயமுற்ற போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Advertisement