யார் அந்த சார் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்; எல்லாம் ஞானசேகரன் செயல்!

சென்னை: சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் மீது சிறப்பு புலனாய்வுக்குழுவினர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.
@1brசென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த சம்பவத்துக்கும், 'சார்' என்று அழைத்து ஞானசேகரன் போனில் பேசிய ஒருவருக்கும் தொடர்பு உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. கைது நடவடிக்கையை தொடர்ந்து யார் அந்த சார் என்ற விவகாரமும் பெரிதானது.
வழக்கில் சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதல்படி, 3 பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந் நிலையில், ஞானசேகரன் மீது சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் முதல்கட்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். ஆன்லைன் மூலமாக அவர்கள் தாக்கல் செய்து இருக்கின்றனர்.
அதில் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரனுக்கு மட்டுமே தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், செல்போன் உரையாடல்கள் என அனைத்தும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்று உள்ளதாக தெரிகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement