திருப்பூர் தெற்கு துணை கமிஷனர் நியமனம்

திருப்பூர்; திருப்பூர் தெற்கு துணை கமிஷனராக தீபா சத்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் தெற்கு துணை கமிஷனராக இருந்த கிரிஷ் அசோக் யாதவ், மாவட்ட எஸ்.பி., யாக சென்றார். அதன் பின், கடந்த, ஒன்றரை மாதமாக அப்பணியிடத்துக்கு யாரும் நியமிக்கப்படாமல் இருந்தது.

துணை கமிஷனர் (நிர்வாகம்) ராஜராஜன் கூடுதலாக கவனித்து வந்தார்.

நேற்று தமிழகம் முழுவதும், 15 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதில், சென்னையில் இருந்து, தீபா சத்யன், திருப்பூர் தெற்கு துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Advertisement