ரேஷன் கடை துாண் சேதம் சிட்டியம்பாக்கத்தில் அச்சம்

சிட்டியம்பாக்கம்,
வாலாஜாபாத் ஒன்றியம் இலுப்பப்பட்டு ஊராட்சி, சிட்டியம்பாக்கத்தில் செவ்வாய், வியாழன், சனிக்கிழமையில் மட்டும் செயல்படும் பகுதி நேர ரேஷன் கடை இயங்கி வருகிறது.

இங்கு, 257 கார்டுதாரர்களுக்கு கார்டின் வகைப்பாட்டிற்கு ஏற்ப அரிசி, பருப்பு, சர்க்கரை, மண்ணெண்ணெய், பாமாயில் உள்ளிட்டைவை வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது, ரேஷன் கடை கட்டடத்தின் துாணின் அடிப்பாகத்தில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன.

மேலும், கட்டடத்தை தாங்கி பிடிக்கும் துாண் வலுவிழந்த நிலையில் உள்ளதால், ரேஷன் கடைக்கு வருவோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே, சேதமடைந்த நிலையில் உள்ள துாணை சீரமைக்க வேண்டும் என, சிட்டியம்பாக்கம் வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement