மாணவர்களுக்கான கிரிக்கெட் காஞ்சி ‛'பிரிம்மிங்' பள்ளி வெற்றி

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் 'பிரிம்மிங் ஹை இன்டர்நேஷனல்' பள்ளி சார்பில், 14 வயதிற்கு உட்பட்டோருக்கான, 'பிரிம்மிங் பிரீமியர் லீக் -- 2025' கிரிக்கெட் போட்டி, கடந்த 22, 23ம் தேதி காஞ்சிபுரத்தில் நடந்தது.

'நாக் அவுட்' முறையில், 12 ஓவர்கள் கொண்ட இப்போட்டியில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பள்ளி அணிகள் பங்கேற்றன. இறுதி போட்டி நேற்று முன்தினம் நடந்தது.

இதில், காஞ்சிபுரம் 'பிரிம்மிங் ஹை இன்டர்நேஷனல்' பள்ளியும், வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி அணியும் மோதின.

இதில், முதலில் விளையாடிய பிரிம்மிங் அணி, நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு, 130 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து விளையாடிய வேலம்மாள் அணி, 12 ஓவர் முடிவில், ஐந்து விக்கெட் இழப்பிற்கு, 98 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதன் வாயிலாக 'பிரிம்மிங்' அணி 32 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

இதில், 'பிரிம்மிங்' பள்ளியைச் சேர்ந்த மாணவர் தாரகேஷ், 34 பந்துகளுக்கு 78 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது பெற்றார். தொடர்ந்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, 'பிரிம்மிங்' குழுமத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன், நிர்வாக இயக்குநர் தயாநிதி, தலைமையாசிரியை ஆனந்தி ஆகியோர் பரிசு வழங்கினர்.

Advertisement