தெற்காசிய தடகளம்: இந்தியா விலகல்

புதுடில்லி: பாகிஸ்தானில் நடந்த தெற்காசி தடகள சாம்பியன்ஷிப்பில் இருந்து கடைசி நேரத்தில் விலகியது இந்தியா.
தெற்காசிய தடகள கூட்டமைப்பு சார்பில், பாகிஸ்தானில் கடந்த 70 ஆண்டில் முதன் முறையாக 'கிராஸ்-கன்ட்ரி' சாம்பியன்ஷிப் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க இருப்பதாக செய்தி வெளியாகின.
கடந்த 2019 புல்வாமா தாக்குதலுக்குப் பின், இந்திய விளையாட்டு அணிகள், பாகிஸ்தான் செல்வதை தவிர்த்து வருகின்றன. தற்போது நடக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க, இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தான் செல்ல மறுத்தது.
இந்த வரிசையில் தடகள சாம்பியன்ஷிப்பில் இருந்து இந்திய அணி, பாதுகாப்பு காரண்ங்களுக்காக கடைசி நேரத்தில் விலகியது. இதேபோல, பூடானும் போட்டியில் இருந்து வெளியேறியது. இதற்கான காரணங்கள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும் பாகிஸ்தானுடன், இலங்கை, வங்கதேசம், நேபாளம், மாலத்தீவு நாடுகள் பங்கேற்றன.
மேலும்
-
பாலியல் வன்முறை வழக்கில் கைதான ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை
-
பழங்குடி இன சான்றிதழ் கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்
-
உடல் பருமன் தடுப்பு பிரசாரம்; 10 பேரை பரிந்துரைத்த மோடி
-
அவதுாறு வழக்கு பா.ஜ., பிரமுகர் கோர்ட்டில் சரண்
-
ஜெய்சங்கர், 61 நாடுகளின் துாதர்கள் காஜிரங்கா பூங்காவை சுற்றி பார்த்தனர்
-
இன்று தற்செயல் விடுப்பு போராட்டம் ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு