அஞ்சல் காப்பீடு முகவர் பணிக்கு நேர்காணல்
சென்னை, மத்திய அரசின் அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களில் முகவர்களாக செயல்பட விருப்பம் உள்ளவர்களுக்கு, முதன்மை அஞ்சலக அதிகாரி, சென்னை பொது அஞ்சலகம், சென்னை - 1 என்ற முகவரியில், இன்று காலை, 11:00 மணிக்கு நேர்காணல் நடக்கிறது.
ஆர்வமுள்ள, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், கல்வி சான்று, ஆதார், பான் கார்டு உள்ளிட்ட விபரங்களுடன் பங்கேற்கலாம்.
தேர்வாவோர், முகவர்களாக செயல்பட, 5,000 ரூபாய் டிபாசிட், 50 ரூபாய் உரிமக் கட்டணம் செலுத்த வேண்டும். தேர்வாகும் நபர்களுக்கு தற்காலிக முகவர் உரிமம் வழங்கப்படும்.
விபரங்களை, 044 - 2521 2549 என்ற தொலைபேசி எண்ணில் பேசி அறியலாம் என, முதன்மைஅஞ்சலக அதிகாரி தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement