விதான் சவுதாவில் புத்தக கண்காட்சி
பெங்களூரு: பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று சபாநாயகர் காதர் அளித்த பேட்டி:
கர்நாடக வரலாற்றின் முதன் முறையாக, விதான் சவுதாவில், வரும் 27 முதல் மார்ச் 3ம் தேதி வரை 'புத்தக கண்காட்சி' ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்.
கன்னடம், துளு, கொங்கனி அகாடமிக்கு தலா ஒரு ஸ்டால் ஒதுக்கப்பட்டு உள்ளது. கண்காட்சியில் புத்தகம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்; மாலையில் இசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கன்னடத்துக்கு ஞானபீட விருது வென்ற சந்திரசேகர் கம்பாரா, எழுத்தாளர் தாமோதர் மவுஜியும் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
மார்ச் 2ல் நடிகர் சாது கோகிலாவின் பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடக்கிறது. பொது மக்களுக்கு அனுமதி இலவசம். நிறைவு நாளான மார்ச் 3ல் சட்டசபை கூட்டம் இருப்பதால் பொது மக்களுக்கு அனுமதி இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.