சேர்மன் கார்களை பொறியாளர்கள் பயன்படுத்த உத்தரவால் புலம்பல்

சேந்தமங்கலம்: தமிழகத்தில், ஊராட்சிகள் மற்றும் யூனியன் தலைவர்களின் பத-விக்காலம், கடந்த, 5ல் முடிந்தது. இதையடுத்து, வரும் ஜூலை, 5 வரை பஞ்.,களை


நிர்வகிக்க சிறப்பு அலுவலர்களை நியமித்து அரசு ஆணையிட்-டுள்ளது. இந்நிலையில், யூனியன் தலைவர்களின் பதவிக்காலம் முடிந்ததால், தலைவர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களை, ஊராட்சி மற்றும் யூனியன்களில் நிர்வாக பணிகளை மேற்-கொள்ள, யூனியன் அலுவலக பொறியாளர்கள் பயன்படுத்தலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.


இதேபோல், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் பயன்படுத்தி வந்த வாகனங்களை, ஊரக வளர்ச்சி
முகமையின் கட்டுப்பாட்டில் வைத்து, அதன் உதவி திட்ட
அலுவலர்கள் பயன்படுத்தலாம் என, அரசு உத்தரவிட்டுள்ளது.
யூனியன் தலைவர்கள் பயன்படுத்தி வந்த வாகனங்களுக்கு, மாதம், 100 லிட்டர் டீசல் மட்டும் அனுமதி என்பதால், பல பொறியாளர்கள் இந்த வாகனங்களுக்கு டீசல் எந்த பணத்தில் இருந்து அடிப்பது என, தெரியாமல் புலம்பி வருகின்றனர்.

Advertisement