தேரோடும் வீதியில் அவசர கதியில் வடிகால் பணியால் விபத்து அச்சம்
குமாரபாளையம்: குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோவில் மகா குண்டம், தேர் திருவிழாவையொட்டி, கடந்த, 18ல் பூச்சாட்டு விழா நடந்தது. மார்ச், 4ல் தேர் கலசம் வைத்தல், அதே நாள் இரவு, காவிரி ஆற்றிலிருந்து சக்தி அழைத்தல், 5ல் மகா குண்டம், பூ மிதித்தல், 6ல் அம்மன் திருக்கல்யாணம், தேர்த்திருவிழா, வண்டி வேடிக்கை, 7ல் தேர் நிலை நிறுத்துதல், வாண வேடிக்கை, அம்மன் திருவீதி உலா, 8ல் அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, 9ல் அம்மனுக்கு ஊஞ்சல் விழா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
ஒருவாரத்தில் தேரோட்டம் நடைபெறவுள்ள வீதியில், அவசர கதியில் வடிகால் கட்டும்பணி நடந்து வருகிறது. இந்த இடம் தேர் சக்கரம் ஏறி இறங்கும் இடம். அதிக எடை கொண்ட தேர், இந்த பகுதியில் ஏறி, இறங்கினால் விபத்து அச்சம் உருவாகியுள்-ளது. இதனை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.