ராசிபுரத்தில் 6 இடங்களில் முதல்வர் மருந்தகம் திறப்பு

ராசிபுரம்: தமிழக முதல்வர் ஸ்டாலின், நேற்று கான்பரன்ஸ் வாயிலாக, தமி-ழகம் முழுவதும், 1,000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, ராசிபுரம் பகுதியில் மங்களபுரம், திம்மநாயக்கன்பட்டி, நாமகிரிப்பேட்டை, அத்தனுார், ஆயிபா-ளையம், பிள்ளாநல்லுார் ஆகிய ஆறு இடங்களில், அமைச்சர் மதிவேந்தன் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார்.


அப்போது அவர் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில், 17 கூட்-டுறவு சங்கங்களின் மருந்தகங்கள், 10 தனிநபர் மருந்தகங்கள் என, மொத்தம், 27 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டுள்ளன. இம்ம-ருந்தகங்கள் வாயிலாக தரமான மருந்துகள் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. ஏழை, எளிய மக்கள், முதியோர், சர்க்கரை நோயாளிகள், ரத்த அழுத்த நோயாளிகள் தங்-களுக்கு தேவையான மருந்துகளை வாங்க, 500 முதல், 1,000 ரூபாய் வரை செலவிடுகின்றனர். பொதுமக்களின் ஆரோக்கி-யத்தை பாதுகாக்க, 'முதல்வர் மருந்தகங்கள்' மூலம், 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் சேவை மனப்பான்மையோடு மருந்-துகள் விற்பனை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முன்னாள் எம்.எல்.ஏ., ராம சுவாமி, கூட்டுறவு சங்க இணைப்பதி-வாளர் அருளரசு உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து-கொண்டனர்.

Advertisement