காரைக்கால் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு

காரைக்கால்: காரைக்கால் அரசு பொதுமருந்துவமனையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில், கலெக்டர் சோமசேகர் அப்பாராவ், நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அவசர சிகிச்சை, பொது சிகிச்சை பிரிவு உட்பட பல இடங்களை பார்வையிட்டார்.

மருத்துவமனையின் நிலை, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.

மருந்தகம், புறநோயாளி பிரிவில் கூட்டம் அதிகமாக உள்ளதால், அங்கு இருக்கைகள் அமைக்க வேண்டும், மருத்துவமனை முழுவதும் துாய்மையாக வைத்திருக்க வேண்டும் என, மருந்துவ அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணகி, மருத்துவ அதிகாரி பார்த்திபவிஜயன் உடனிருந்தனர்.

Advertisement