ஜெயலலிதா பிறந்தநாள் ஆஞ்சநேயர் கோவிலில் தங்கத்தேர் இழுப்பு

நாமக்கல்: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், 77வது பிறந்த நாள் விழா, மாநிலம் முழுவதும், அ.தி.மு.க.,வினர் உற்சாகமாக கொண்டாடினர். அதன்படி, நாமக்கல் அ.தி.மு.க., சார்பில், நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், தங்கத்தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் தமிழ்-மணி, பொதுக்குழு உறுப்பினர் மயில் சுந்தரம், ஜெ., பேரவை செயலாளர் சந்திரசேகரன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், கோபி, முன்னாள் மாவட்ட பஞ்., தலைவர் காந்திமுருகேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.


* நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட வக்கீல் பிரிவு சார்பில் நடந்த விழாவுக்கு, முன்னாள் தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினரான பாலுசாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், மாவட்ட பொருளாளர் காளியப்பன் ஆகியோர் பங்கேற்றனர். மாவட்ட வக்கீல் பிரிவு தலைவர் தனசேகரன், பொருளாளர் பர-ணிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் அரசு வக்கீல் மணிமேகலை, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ருத்ரா தேவி, மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் வக்கீல் முரளி பாலுசாமி உள்-பட பலர் பங்கேற்றனர்.

Advertisement