புதுச்சேரி பெண்ணிடம் ரூ. 4.41 லட்சம் மோசடி

புதுச்சேரி: பகுதி நேர வேலையாக ஆன்லைனில் பணம் சம்பாதிக்கலாம் என கூறி, புதுச்சேரி பெண்ணிடம் ரூ. 4.41 லட்சம் மோசடி கும்பல் ஏமாற்றியுள்ளது.

புதுச்சேரி, கொசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செண்பகவள்ளி. இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர் வீட்டில் இருந்தபடி, பகுதி நேர வேலையாக ஆன்லைனில்பணம் செலுத்தி அதிகம் சம்பாதிக்கலாம் என, கூறியுள்ளார்.

அதைநம்பி செண்பகவள்ளி மர்மநபர் கூறியபடி, 4 லட்சத்து 41 ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் செலுத்தி, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்து வந்தார்.

அதன் மூலம் வந்த பணத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை. மேலும், மர்மநபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அதன் பிறகே மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது.

இதேபோல், லாஸ்பேட்டை ஜவகர்லால் 65 ஆயிரம், முத்திரையார்பாளையம் வசுமதி 18 ஆயிரம், கம்பளிக்காரன்குப்பம் மணிமேகலை 20 ஆயிரத்து 200 ரூபாயை இழந்துள்ளனர்.

காலாப்பட்டு பகுதியை சேர்ந்த மணிபாரதி என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர், அமெரிக்காவில் இருந்து உறவினர் பேசுவதாகவும், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறியுள்ளார்.

இதைநம்பிய, மணிபாரதி அவருக்கு, 60 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். வெங்கடா நகர் பூஜா அசோகன் என்பவர் ஆன்லைனில் துணி ஆர்டர் செய்து, ரூ. 1,500 இழந்துள்ளார்.

இதுபோல், மொத்தம் 6 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 6 லட்சத்து 5,700 ரூபாய் ஏமாந்துள்ளனர்.

இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement