தம்பியின் வில்லங்க செயலால் அண்ணன் குடிசைக்கு தீ வைப்பு

கோபி: திங்களூர் அருகே நிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்-தராஜ், 30, டிராக்டர் டிரைவர்; இவருக்கு சொந்தமான இடத்தில் வேலுாரை சேர்ந்த, ராமமூர்த்தி, 35, பாஸ்ட்புட் கடை நடத்தி வந்தார். கோவிந்தராஜின் தம்பி ரஜ்ஜித், 21; இவருக்கு ராமமூர்த்-தியின் மனைவி கவிதாவுடன், 30, பழக்கம் ஏற்பட்டது. கடந்த, 2024 டிச.,ல் கவிதா மற்றும் அவரின் நான்கு வயது குழந்தையை, ரஜ்ஜித் கூட்டி சென்றார்.

இதனால் கோவிந்தராஜ் குடும்பத்தின் மீது ராமமூர்த்தி பகை கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், கோவிந்தராஜின் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. மற்றொரு வீட்டில் கோவிந்தராஜ் குடும்பத்தார் துாங்கி-யதால் எழுந்து வந்து பார்த்தனர். அப்போது கேனுடன் பைக்கில் சென்ற ராமமூர்த்தி செல்வது தெரிந்தது. தம்பி மீதான கோபத்தால் தனது குடிசையை பெட்ரோல் ஊற்றி எரித்து விட்ட-தாக, திங்களூர் போலீசில் கோவிந்தராஜ் புகாரளித்தார். தீ விபத்தில், பைக் மற்றும் மொபட், இரு பீரோ, 15 நெல் மூட்டை, ஆதார் கார்டு, துணிகள் மற்றும் ஆவணங்கள் என எரிந்து விட்ட-தாக புகாரில் தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் திங்களூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement