சாரதா கங்காதரன் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

புதுச்சேரி: புதுச்சேரி சாரதா கங்காதரன் கல்லுாரி் வெள்ளி விழா ஆண்டையொட்டி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி துணைத்தலைவர் பழனிராஜா துவக்கி வைத்தார். மாநில உயர்கல்வி குழு முன்னாள் செயலர் மோகன்தாஸ் சிறப்புரை ஆற்றினார். கல்லுாரி முதல்வர் பாபு வாழ்த்தி பேசினார். இதில், முன்னாள் மாணவ, மாணவிகளின் சங்கம் புதுப்பிக்கப்பட்டு, சங்கத்தின் தலைவராக கார்த்திக் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
துணை தலைவராக மோனிஷா, செயலாளராக கவுரி, இணை செயலாளர்களாக டேனியல், சினேகா, பொருளாளராக மணிகண்டன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.கல்லுாரியின் 2017--20, 2018--21, 2019--2022ம் கல்வியாண்டு இளங்கலை, 2018--20, 2019--21, 2020--22 ஆண்டு முதுகலை பட்டப்படிப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, மாணவர்கள், தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில், நுண்கலை தினம் நடந்தது.