குமரன் அரங்கம் அமைக்க கோவில் நிலம் ரத்து செய்ய இந்து முன்னணி வலியுறுத்தல்

ஈரோடு: ஈரோடு மாவட்ட இந்து முன்னணி பொது செயலாளர் கார்த்திக் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று வழங்கிய மனுவில் கூறியதாவது: பெருந்துறை தாலுகா அட்டவணை பிடா-ரியூரில் அறநிலையத்துறைக்கு சொந்தமான, 1.50 ஏக்கரில், 40 சென்ட் நிலத்தை தியாகி குமரன் திருவுருவச்சிலையுடன் அரங்கம் அமைக்க, செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு குத்தகைக்கு வழங்-கியதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறோம்.


கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, தற்காலிக நினைவகம் அமைப்பதைவிட, அரசுக்கு சொந்தமான இடத்தில் நிரந்தர நினைவகம் அமைப்பது சிறந்தது.


குத்தகைக்கு விடப்பட்ட கோவில் நிலத்தில், சென்னிமலை மலைக்கோவிலின் தைப்பூசம், கந்தசஷ்டி, பங்குனி உத்திரம் போன்ற நிகழ்வுகள், புரட்டாசி, மார்கழி மாதம் பெருமாளை தரி-சிக்க வரும் பக்தர்கள் வாகன நிறுத்தமாக பயன்படுத்துவர். கோசாலை விரிவாக்கத்துக்கும், கோசாலை மாடுகளுக்கு தீவன பயிரிட ஏதுவாக இருக்கும் இடத்தில், 40 சென்ட் விஸ்தீரண-முள்ள பூமியை மணிமண்டபம் அமைக்க வழங்குவது சரியல்ல. இதற்கு பதில் சென்னிமலை வடக்கு ராஜவீதியில் ஏற்கனவே குமரன் வாசகசாலை உள்ள கட்டடத்தை நினைவகமாக நிறு-வினால், மக்கள் பயன்படுத்துவர். எனவே, குமரன் நினைவு அரங்கம் அமைக்க குத்தகைக்கு வழங்குவதை தவிர்த்து, அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்-துள்ளனர்.

Advertisement