பவானியில் ஒரே இரவில் ௩ இடங்களில் திருட்டு

பவானி: பவானி, காமராஜர் நகர், பூங்கா வீதி பகுதியில் வசித்து வரு-பவர் செல்வராஜ், 45; கூலி தொழிலாளி. இவரது மனைவி மனோ, 40; இருவரும் நேற்று முன்தினம் காசிக்கு புறப்பட்டு சென்றனர். இதையறிந்த மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 70 ஆயிரம் ரூபாயை திருடி சென்றனர்.


இதேபோல் பவானி - மேட்டூர் ரோட்டில் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனை எதிரே டீக்கடை பூட்டை உடைத்து, 7,௦௦௦ ரூபாய், மற்றொரு டீக்கடையில், ௧,௦௦௦ ரூபாயை திருடி சென்றுள்ளனர். ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த தொடர் திருட்டு குறித்து, பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement