கணக்காளர் வரையறையில் காஸ்ட் அக்கவுண்டன்டை சேர்க்க கோரிக்கை

புதுச்சேரி: வருமான வரி மசோதா 2025 - பிரிவின் கீழ், கணக்காளர் வரையறையில், காஸ்ட் அக்கவுண்டன்டை சேர்க்க கோரிக்கை வைத்துள்ளது.

இதுகுறித்து, இந்திய அடக்கவிலையியல் கணக்காளர் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:

மத்திய அரசு கடந்த 13ம் தேதி அறிமுகப்படுத்திய வருமான வரி மசோதாவிற்கு, இந்திய அடக்கவிலையியல் கணக்காளர் நிறுவனம் வரவேற்பு அளிக்கிறது. மத்திய அரசு நேரடி வரிகள் வாரியத்திற்கு, அதிக தன்னாட்சி அதிகாரம் அளித்தல், வரி நிர்வாகத்திற்கான எளிமையான மற்றும் வெளிப்படை கட்டமைப்பு அறிமுகப்படுத்துதல் மற்றும் எளிமையான மற்றும் வெளிப்படையான கட்டமைப்பை அறிமுகப்படுத்தல் சட்டம், வழக்குகளை குறைக்க தன்னார்வ இணக்கத்தை மேம்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டவுடன், இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரத்துடன் இணைந்த, மிகவும் வலிமையான அணுகக்கூடிய வரி செலுத்துவோர் நட்பு அமைப்புக்கு வழி வகுக்கும். வளர்ந்த நாடு, 2047ல் தொலை நோக்குப் பார்வையை நனவாக்குவதில், எங்கள் பங்கை திறப்பட செய்ய நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

வருமான வரி மசோதா 2025ஐ ஆய்வு செய்வதற்காக, லோக்சபாவின் தேர்வு குழுவிடம், கணக்காளர் வரையரையில், அடக்கவிலையில் கணக்காளரை சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

மத்திய அரசியிடம் சமர்ப்பித்துள்ள கோரிக்கை மனுவை, நமது கிளை சார்பில், வைத்திலிங்கம் எம்.பி., யிடமும் கொடுத்துள்ளனர். இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.

Advertisement