கோவை வந்தார் அமித் ஷா

1

கோவை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவை வந்துள்ளார்.


ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா நாளை கோலாகலமாக நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்கிறார். இதற்கென அவர், இன்று இரவு கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார். நாளை காலை கோவை பீளமேட்டில் பா.ஜ., மாவட்ட கட்சி அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.



Tamil News
Tamil News
தொடர்ந்து, மாநில கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார். இரவு ஈஷா யோகா மையத்தில் நடக்கும் மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொள்கிறார்.
அமித் ஷா வருகையை முன்னிட்டு, கோவையில் அவர் தங்கியிருக்கும் ஹோட்டல், பா.ஜ., மாவட்ட அலுவலகம், ஈஷா யோகா மையம் ஆகிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement