மாநகராட்சி இணையவழி சேவை மூன்று நாட்களுக்கு முடக்கம்

சென்னை,பராமரிப்பு பணி காரணமாக, சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவை, 28ம் தேதி முதல் மார்ச் 2ம் தேதி வரை முடக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியின், https://chennaicorporation.gov.in/ என்ற இணையதளத்தில், சொத்துவரி, தொழில் வரி செலுத்துதல், பிறப்பு, இறப்பு சான்றிதழ் விண்ணப்பித்தல் மற்றும் பெறுதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

அதனால், தினமும் நுாற்றுக்கணக்கானோர் இந்த இணையதளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் அனைத்தும் பராமரிப்பு காரணமாக, 28ம் தேதி இரவு 10:00 மணி முதல் மார்ச் 2 இரவு 10:00 மணி வரை நிறுத்தப்படுவதாக, மாநகராட்சி அறிவித்து உள்ளது.

எனவே, இணையவழி சேவை பெறுவோர், அதற்கு முன் அல்லது 2ம் தேதிக்கு பின், மீண்டும் பயன்படுத்தி கொள்ளலாம் என, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement