தடுப்பு அமைத்து போலீஸ் சோதனை ஏர்போர்ட் வெளியே வாகன நெரிசல்

சென்னை விமானத்தில் சென்னை விமான நிலையம் வருவோர், தாம்பரம், செங்கல்பட்டுக்கு செல்ல, ஜி.எஸ்.டி., சாலை வெளியே வந்து, 'யு- டர்ன்' செய்து செல்ல வேண்டும்.
இந்த பகுதியில், வாகன சோதனை என்ற பெயரில், மீனம்பாக்கம் போக்குவரத்து போலீசார் மீண்டும் இரும்பு தடுப்பு அமைத்து, நெருக்கடிக்கு வழிவகுப்பதோடு, வசூல் நடத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.
விமான நிலைய பிரிபெய்ட் டாக்சி மற்றும் தனியார் செயலி டாக்சி ஓட்டுநர்கள் ஒரே சமயத்தில், 'யு டன்' செய்ய வரும் நேரத்தில், வாகன சோதனை என்ற பெயரில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை காண்பிக்க சொல்லி, போலீசார் நீண்ட நேரம் காக்க வைக்கின்றனர்.
இதனால், சென்னை விமான நிலைய வளாகத்தில் துவங்கி, ஜி.எஸ்.டி., சாலை வரை நுாற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதுகுறித்து, நம் நாளிதழில் சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது.
அதன்பின் போலீசார், அவ்வழியே வாகன சோதனைக்காக வைத்திருந்த இரும்பு தடுப்பை தற்காலிகமாக அகற்றினர்.
கடந்த சில நாட்களாக, குடிபோதையில் வாகனம் ஓட்டி வருகிறார்களா என கண்காணிக்கிறோம் என, மீண்டும் தடுப்பு அமைத்து, அவ்வழியே வரும் வாகனங்களை நிறுத்துகின்றனர்.
விமான பயணத்தில் களைத்து போய் வந்த பயணியர், மீண்டும் நீண்ட நேரம் காத்திருந்து, வீட்டிற்கு செல்ல வேண்டுமா என புலம்புகின்றனர்.
இதற்கு, சம்பந்தப்பட்ட போலீஸ் உயர் அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.
மேலும்
-
மகா கும்பமேளா இன்று நிறைவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
-
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது அல்ல
-
சிவராத்திரியை முன்னிட்டு 'சோம்நாத் மஹோத்சவம்'
-
உக்ரைன் விவகாரத்தில் கொள்கையை மாற்றிய அமெரிக்கா
-
கும்பமேளாவில் நடந்த சம்பவம் செல்போனில் கணவர் வீடியோ காலில் அழைத்த போது மனைவி செய்த செயல்
-
சீர்காழி இரட்டை கொலை வழக்கு கடலுாரை சேர்ந்த 4 பேருக்கு ஆயுள்