முன்னாள் ராணுவ வீரர் மரணத்தில் திருப்பம் மனைவி, மைத்துனர் உட்பட 8 பேர் சிக்கினர்

திருவாலங்காடு, பெரும்பாக்கத்தில் ரவுடிகளாக வலம் வந்து தலைமறைவான மணிகண்டன், 23, லோகேஸ்வரன், 23, மற்றும் ஸ்ரீராம், 20, ஆகியோரை, போலீசார் தேடி வந்தனர். அவர்கள், திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. கடந்த 10ம் தேதி அங்கு சென்ற போலீசார் மூவரையும் கைது செய்தனர். சந்தேகத்தின் அடிப்படையில், தங்க இடம் கொடுத்த அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ், 30, பிரசாந்த், 27, ஆகியோர் என, ஐந்து பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதில், முன்னாள் ராணுவ வீரரை வாகனம் ஏற்றி கொல்ல முயன்று, அது முடியாமல் போக இரும்பு கம்பியால் அடித்து கொன்ற 'திடுக்கிடும்' தகவல் வெளியானது.
கொலை செய்யப்பட்டது, திருவாலங்காடு, முத்துக்கொண்டாபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 47, என்பதும், கடந்த 3ம் தேதி விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக, திருவாலங்காடு போலீசார் வழக்கு பதிந்திருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து, ஐந்து பேரும் திருவாலங்காடு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலீசார் கொலை வழக்காக மாற்றி, கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும், சிறையில் அடைத்தனர்.
பிரசாந்த் தவிர, மற்ற நான்கு பேரையும் நீதிமன்ற காவலில் எடுத்து தனித்தனியே விசாரணை மேற்கொண்டனர்.
இதில், வெங்கடேசனின் மனைவி சந்தியா, 31, அவரது சகோதரர் சண்முகம், கள்ளக்காதலனான அ.தி.மு.க., பிரமுகர் லோகேஷ், 37, ஆகியோர் சேர்ந்து, சதீஷின் உதவியுடன் வெங்கடேசனை கூலிப்படையை வைத்து கொலை செய்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, எட்டு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
மகா கும்பமேளா இன்று நிறைவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
-
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது அல்ல
-
சிவராத்திரியை முன்னிட்டு 'சோம்நாத் மஹோத்சவம்'
-
உக்ரைன் விவகாரத்தில் கொள்கையை மாற்றிய அமெரிக்கா
-
கும்பமேளாவில் நடந்த சம்பவம் செல்போனில் கணவர் வீடியோ காலில் அழைத்த போது மனைவி செய்த செயல்
-
சீர்காழி இரட்டை கொலை வழக்கு கடலுாரை சேர்ந்த 4 பேருக்கு ஆயுள்