நடிகர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை

1

சென்னை: த.வெ.க., 2ம் ஆண்டு துவக்க விழா நாளை(பிப்.,26) நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் உடன், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார்.


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவக்கி உள்ளார். இக்கட்சியின் இரண்டாம் ஆண்டு விழா மாமல்லபுரத்தில் நாளை(பிப்.,26) நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உட்பட 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு மாவட்ட செயலர்களை வரவழைத்து கட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டு உள்ளன. நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நாளை துவக்க உள்ள நடைபெற உள்ள நிலையில், கட்சியின் தேர்தல் வியூக நிபுணராக நியமிக்கப்பட்டு உள்ள பிரசாந்த் கிஷோர் சென்னை இன்று இரவு சென்னை வந்தார். அவர் கட்சியின் தலைவரான விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Advertisement