மின் ஊழியர் மத்திய அமைப்பினர் நாமக்கல்லில் தர்ணா போராட்டம்
மின் ஊழியர் மத்திய அமைப்பினர் நாமக்கல்லில் தர்ணா போராட்டம்
நாமக்கல்:பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் செயல்படும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டத்தலைவர் செல்வகுமார் தலைமை வகித்தார். திட்ட செயலாளர் சவுந்தர்ராஜன், துணை செயலாளர்கள் கண்ணன், பழனிவேல் ஆகியோர் பேசினர்.
அதில், மின் வாரியத்தில் ஆரம்ப கட்ட காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை புகுத்தக்கூடாது. 'கேங்மேன்' பதவியை கள உதவியாளர்
பதவியாக அறிவிக்க வேண்டும். ஊதிய உயர்வு - வேளைப்பளு பேச்சுவார்த்தையை உடனே துவங்க வேண்டும்.புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 2019 டிச., 1 முதல், 2023 மே, 16 வரை மின்வாரிய பணியில் சேர்ந்தவர்களுக்கு, 0.6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இடைக்கால நிவாரணம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர். திட்ட இணை செயலாளர்கள் சரவணகுமார், மணிவண்ணன், தங்கதுரை, சரவணன், கனகராஜ், அர்ஜூன், விஜயகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.