தந்தை வெட்டிக்கொலை கோபக்கார மகன் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தை சேர்ந்தவர் பார்த்திபன், 56; கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

பார்த்திபனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. நேற்று மதியம் வீட்டில் தகராறு செய்து மனைவி, மகளை அடித்துள்ளார். ஆத்திரமுற்ற மூத்த மகன் முத்துச்செல்வன், 26, தந்தையை சரமாரியாக அரிவாளால் வெட்டினார்.

பலத்த காயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே இறந்தார். முத்துச்செல்வனை கூடங்குளம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement