வீணானது வாட்சன் சதம் * வெ. இண்டீஸ் 'மாஸ்டர்ஸ்' வெற்றி

நவி மும்பை: சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி, 7 விக்கெட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
இந்தியாவில் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் 'டி-20' தொடர் நடக்கிறது. ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் இத்தொடரில் ஆறு அணிகள் மோதுகின்றன. நவி மும்பையில் நடந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மோதின.
முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் வாட்சன் 52 பந்தில் 107 ரன் எடுத்து கைகொடுத்தார். கிறிஸ்டியன் 32, கட்டிங் 18 ரன் எடுத்தனர். ஆஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணி 20 ஓவரில் 216/8 ரன் குவித்தது.
பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணிக்கு டுவைன் ஸ்மித் (51) அரைசதம் அடித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கெய்ல் 11 ரன் மட்டும் எடுத்தார். கேப்டன் பிரையன் லாரா, 33 ரன் எடுத்தார். சிம்மன்ஸ் அரைசதம் விளாச, வெஸ்ட் இண்டீஸ் மாஸ்டர்ஸ் அணி 19.2 ஓவரில் 220/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சிம்மன்ஸ் (94), வால்டன் (23) அவுட்டாகாமல் இருந்தார்.

Advertisement