18,000 மெகா வாட்டை தாண்டியது மின் தேவை
சென்னை:தினமும் சராசரியாக, 16,000 மெகா வாட்டாக உள்ள மின் தேவை, கோடை காலத்தில் அதிகரிக்கிறது. அதன்படி, 2024 மே 2ல், 20,830 மெகா வாட்டாக அதிகரித்தது. இதுவே, இதுவரை உச்ச அளவாக உள்ளது. இந்த கோடையில் மின் தேவை, 22,000 மெகா வாட்டை தாண்டும் என, மின் வாரியம்மதிப்பீடு செய்துள்ளது.
எனவே, அடுத்த மாதத்தில் இருந்து வெயில் சுட்டெரிக்கும் என்பதால், அதற்கு ஏற்ப மின் தேவையும், 18,000 மெகா வாட் மேல் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாத துவக்கத்தில், காலையில் பனிப்பொழிவு அதிகம் இருந்ததால், மின் தேவை வழக்கமான அளவில் இருந்தது.
இந்நிலையில், சில தினங்களாக வெயில் கடுமையாக இருப்பதால், வீடுகளில் பகலிலும், 'ஏசி' சாதனம் பயன்படுத்தி வருகின்றனர். இதையடுத்து, நேற்று காலை மின் தேவை, 18,000 மெகா வாட்டை தாண்டி, 18,205 மெகா வாட்டாக அதிகரித்தது.
இதுவே, பிப்ரவரியில் உச்சபட்ச மின் தேவை அளவு. இதை பூர்த்தி செய்யும் அளவுக்கு, மின் உற்பத்தியும் இருந்தது.
மேலும்
-
எஸ்.பி., அலுவலகத்தில் வியாபாரி தற்கொலை முயற்சி
-
அண்ணனை கத்தியால் குத்திய தம்பி மீது வழக்கு
-
தியேட்டர் ஊழியர் சாவு போலீசார் விசாரணை
-
மழை நிவாரணம் வழங்கக்கோரி வேளாண் அலுவலகம் முற்றுகை
-
ஸ்கூட்டரில் சென்றவர் மரத்தில் மோதி பலி
-
'சர்வீஸ் பிளேஸ்மென்ட்' டாக்டர், செவிலியர்கள் காரைக்காலுக்கு திரும்ப கவர்னர் உத்தரவு