பிரியாணி கடையில் ரகளை மறைமலைநகரில் 5 பேர் கைது
மறைமலைநகர், மறைமலைநகர் 'என்.ஹெச்.1' பகுதியைச் சேர்ந்தவர் உரிமைநாதன்,48. இவர், மறைமலைநகர் பாவேந்தர் சாலையில், நியூ ஆற்காடு பிரியாணி என்ற பெயரில், பிரியாணி கடை நடத்தி வருகிறார்.
கடந்த 23ம் தேதி இரவு, இவரது கடைக்கு வந்த காட்டாங்கொளத்துார் பகுதியைச் சேர்ந்த சச்சின்,19, அவரது நண்பர் தமிழ்ச்செல்வன்,20, ஆகியோர், பிரியாணி சாப்பிட்டு விட்டு பணம் தர மறுத்துள்ளனர்.
பின், தகராறு செய்துவிட்டுச் சென்று உள்ளனர். சிறிது நேரம் கழித்து, தன் நண்பர்கள் சிலருடன் வந்த சச்சின், பிரியாணி கடையில் இருந்த பொருட்களை உடைத்து, அங்கு பணிபுரிந்து வந்த நபர்களையும் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து உரிமைநாதன், மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து விசாரித்த போலீசார், இச்சம்பவத்தில் ஈடுபட்ட காட்டாங்கொளத்துார் பகுதியைச் சேர்ந்த சச்சின், சந்துரு,27, சூர்யா,23, தினேஷ்,27, சுபீஷ்,18, உள்ளிட்ட ஐந்து பேரை நேற்று கைது செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.
பின், செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரையும் தேடி வருகின்றனர்.
மேலும்
-
மகா கும்பமேளா இன்று நிறைவு: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
-
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது அல்ல
-
சிவராத்திரியை முன்னிட்டு 'சோம்நாத் மஹோத்சவம்'
-
உக்ரைன் விவகாரத்தில் கொள்கையை மாற்றிய அமெரிக்கா
-
கும்பமேளாவில் நடந்த சம்பவம் செல்போனில் கணவர் வீடியோ காலில் அழைத்த போது மனைவி செய்த செயல்
-
சீர்காழி இரட்டை கொலை வழக்கு கடலுாரை சேர்ந்த 4 பேருக்கு ஆயுள்