கும்பமேளாவில் நடந்த சம்பவம் செல்போனில் கணவர் வீடியோ காலில் அழைத்த போது மனைவி செய்த செயல்

2


பிரக்யாராஜ் மகா கும்பமேளாவில் கணவர் வீடியோ காலில் இருந்த போது செல்போனை தண்ணீரில் நனைத்து எடுத்த மனைவி செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ‛மகா கும்பமேளா' நடந்து வருகிறது. இது 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும். அதன்படி இந்த மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13-ஆம் தேதி தொடங்கி 45 நாட்கள் நடைபெற்று இன்று (பிப்.26) நிறைவு பெறுகிறது.

மகா கும்பமேளா புனித நீர் ஆன்லைனில் கூட விற்பனை செய்யப்படும் நிலையில் மகா கும்பமேளாவுக்கு நேற்று ஒரு பெண் புனித நீராடினார். அவருடன் கணவரால் வர முடியவில்லை. இதனால் கணவர் வீடியோ கால் செய்த போது அப்படியே செல்போனை தண்ணீரில் 3 முறை மூழ்கி எடுத்தார் மனைவி. அப்பெண் நீரில் செல்போனை நனைத்து எடுக்கும் வீடியோ வைரலாகிறது.

Advertisement